/* */

நாகையில் கொரோனா விதிமுறை மீறி தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்

கொரோனா விதிமுறை மீறி பிரபல தனியார் பள்ளி 10,11,12 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

நாகையில் கொரோனா விதிமுறை மீறி தனியார்    பள்ளியில் சிறப்பு வகுப்புகள்
X

நகையில் தனியார் பள்ளி சிறப்பு வகுப்புக்கு செல்லும் மாணவர்கள்.

நாகையில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி பிரபல தனியார் பள்ளியில் 10,11,12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குவதற்கும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கும் தலைமை செயலாளர் தடை விதித்துள்ளார்.

இந்த நிலையில் நாகை அடுத்த காடம்பாடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் இன்று முதல் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கொரோனா அச்சமின்றி மாணவர்கள் பள்ளிக்கு கூட்டம், கூட்டமாக செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலாளர் அனைத்து வகை வகுப்புகளுக்கும் ஆன்லைன் கற்பித்தலுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 20 April 2021 6:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...
  2. லைஃப்ஸ்டைல்
    ரயில் பெட்டிகளில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகள் இருப்பதை கவனித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிர் நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. லைஃப்ஸ்டைல்
    கருப்பு பேரீச்சம்பழம் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியத்தில் இவ்வளவு...
  5. லைஃப்ஸ்டைல்
    வளையோசை கலகலவென ஓசை கேட்கும் வளைகாப்பு நிகழ்ச்சி..!
  6. தமிழ்நாடு
    புருவம் வழியாக மூளைக் கட்டிக்கான உலகின் முதல் கீஹோல் அறுவை சிகிச்சை:...
  7. அரசியல்
    காங்கிரஸ் சரிவுக்கு காரணம் அறியாமை, சோம்பேறித்தனம், ஆணவம்: சொல்கிறார்...
  8. லைஃப்ஸ்டைல்
    கண்டவுடன் கேட்கும் முதல் கேள்வி, "சாப்பிட்டியாப்பா"..? அம்மா..!
  9. குமாரபாளையம்
    ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
  10. தென்காசி
    ராஜீவ் காந்தி நினைவு நாள் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை