மழை பாதிப்பு நிவாரண பணிகளில் அமைச்சர்கள்: தமிழக அரசு உத்தரவு

மழை பாதிப்பு நிவாரண பணிகளில் அமைச்சர்கள்: தமிழக அரசு உத்தரவு
X
மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

மிக்ஜம் புயல் மீட்பு நடவடிக்கைகளில் பகுதிவாரியாக அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும் கூடுதலாக 7 அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதன்படி சென்னை மண்டலத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

காஞ்சிபுரம் - அமைச்சர் சு. முத்துசாமி

தாம்பரம் - உணவு வழங்கல் துறை அமைச்சர் ர.சக்கரபாணி

ஆவடி - போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் - அமைச்சர் எ.வ.வேலு

சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் - தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அமைச்சர் சி.வெ. கணேசன்

திருவள்ளூர் - வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!