அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!
புன்செய் புளியம்பட்டி அடுத்த விண்ணப்பள்ளி ஊராட்சியில் தனியார் கிரஷர் ஆலை செயல்படுகிறது. அதன் அருகே உள்ள, 2 கிலோ மீட்டர் மண் சாலையை ஆலை நிர்வாகம், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் மண் சாலையை ஒட்டி நான்கு இடங்களில் தார்ச்சாலை அமைக்க பயன்படுத்தும் ஜல்லி கற்களை ஆலை நிர்வாகம் கொட்டியுள்ளது.
விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்தது
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்தது. ஆலைக்கு சட்டவிரோதமாக தார்ச்சாலை அமைக்க முயற்சிப்பதாக புகார் தெரிவித்து நேற்று திரண்டனர். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன், டிப்பர் லாரி உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி பணிகளை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வி.ஏ.ஓ மற்றும் போலீசார் விசாரணை
தகவலறிந்து விண்ணப்பள்ளி வி.ஏ.ஓ., சதீஷ் கமல், புன்செய்புளியம்பட்டி போலீசார் சென்று விசாரித்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., சதீஷ் கமல் கூறியதாவது:
இந்த மண் சாலையானது அரசுக்கு சொந்தமான ஒதுக்கப்படாத இடம் என்ற வகையில் ஆவணத்தில் உள்ளது. 2 கி.மீ., மண் சாலை தற்போது குண்டு, குழியாகி விட்டதால், ஜல்லி கொட்டி சமன்படுத்த ஆலை நிர்வாகம் முன் வந்துள்ளது."
விவசாயிகளின் குற்றச்சாட்டு
ஆனால் விவசாயிகள் தார்ச்-சாலை அமைக்க முயற்சி செய்வதாக தகவல் தந்தனர். விவசா-யிகள் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலை நிர்-வாகம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu