மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க கோரிக்கை
![மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க கோரிக்கை மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க கோரிக்கை](https://www.nativenews.in/h-upload/2022/12/20/1632102-img-20221220-wa0008.webp)
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே விதியை மீறி அள்ளப்படும் கனிம வளங்கள்
செக்கானூரணி அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே நாகமலையில் நடைபெற்று வரும் கனிமவள கொள்ளையை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது.நாகமலை அடிவாரத்தில் 60 செண்டு நிலத்தில் மணல் அல்ல அனுமதி பெற்று 12.ஏக்கர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டு உள்ளது.மேலும், அரசு அனுமதித்துள்ள அளவைவிட அளவுக்கு அதிகமான மணல் அள்ளப்பட்டுள்ளது.இரவு நேரங்களில், ஜேசிபி வாகனம் மூலம் லாரிகளில் ஏற்றி மூன்று வழி பாதைகள் அமைத்து பல்வேறு இடங்களுக்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுகிறது.
இது குறித்து, சமூக ஆர்வலர்கள், திருமங்கலம் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் செக்கானூரணி காவல் நிலையம் ஆகிய இடங்களில் பல்வேறுமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையாம்.மாறாக, மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மற்றும் புகார் அளிப்பவரின் செல்போன் என்னைப் பெற்று நள்ளிரவு வேளையில் அவரது குடும்பத்தினரை மிரட்டும் சூழ்நிலை உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாரக, இப்பகுதியில் உள்ள கிராம பொதுமக்கள் புகார் அளிக்க அச்சப்படுகின்றனர்.மேலும், அடிக்கடி கொலை மிரட்டல் வருவதால் உயிர் பயத்தில் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும்,12 ஏக்கர் நிலப்பரப்பில் மணல் அள்ளி பள்ளம் ஏற்படுத்தியதால் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடு, மாடுகள் அதில் விழுந்து பலியாகும் அபாயமும் உள்ளது.
இது சம்பந்தமாக, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, புகைப்படமும் அனுப்பியும்,இதுவரை வனத்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.குறிப்பாக, மிகவும் பாரம்பரியமான நாகமலையை முற்றிலுமாக உடைத்து சிதிலமடைய செய்யும் முன், மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணையில் இறங்கி கனிமவள கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ,இப்பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று ,சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கனிம வளத்தைப்பாதுகாக்க கடும் நடவடிக்கை...தமிழ்நாட்டில், பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், கார்னட் மணல், சிலிக்கா மணல், குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார், கிராஃபைட், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, மாக்னசைட், பல தொழில் சார்ந்த கனிமங்களும், கனிமங்களான சாதாரண கற்கள், கிராவல் மற்றும் கிரானைட் கற்கள் நிறைந்து காணப்படுகின்றன.இரும்புத்தாது, பிளாட்டினம் மற்றும் மாலிப்டினம் போன்ற பொதுவாக பயன்படுத்தப்படுகின்ற சிறுவகைசெங்கற் களிமண், கருப்பு மற்றும் பலவண்ண கிரானைட் கற்கள் நிறைந்து காணப்படுகின்றன.
2020-2021-ஆம் நிதியாண்டில், சட்டவிரோத குவாரி தடுப்பு பணிகள் மூலமாக 12,390 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, அபராதமாக ரூ.11.73 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10,680 நபர்கள் மீது குற்றவியல் வழக்குகள் / முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: 22 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
சட்ட விரோத குவாரிகள் மற்றும் கனிமகடத்தல் மூலம் அரசிற்கு ஏற்படும் வருவாய்இழப்பினைத் தடுக்க அரசால் பல்வேறு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை கடுமையாக நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மற்றும் வழிமுறைகள்குவாரிகளை திடீர் தணிக்கை மேற்கொள்ளவும்,விதிமீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர அலுவலர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கனிம வளத்துறை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu