மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டும் திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டும் திருவிழா
X
மதுரை மீனாட்சியம்மன் ஆண்டில் ஒரு முறை வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளும் ஆடி மாத முளைகொட்டும் திருவிழா நடைபெற்றது

மதுரை மீனாட்சியம்மன் ஆண்டில் ஒரு முறை மட்டும் வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளும் 6ஆம் நாள் ஆடி மாத முளைகொட்டும் திருவிழா நடைபெற்றது.

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில், ஆடி முளைக்கொட்டு விழா, நவராத்திரி உற்சவம், ஐப்பசி பூரம், மார்கழி திருவிழா போன்றவை மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் திருவிழாக்களாகும்.

ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி, திருவிழாவானது ஆகஸ்ட் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.திருவிழாவின் 6ஆம் நாளான இன்று மீனாட்சிஅம்மன் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிபார் என்பது விசேஷமான ஒன்று. இதனையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து ,அம்மன் ஆடி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story
மேட்டூரில் ஐ.டி.ஐ. மாணவருக்கான விளையாட்டு போட்டி தொடக்கம்