மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு
![மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு மூடப்படாத பள்ளத்தில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிப்பு](https://www.nativenews.in/h-upload/2022/12/16/1630824-img-20221216-wa0040.webp)
மதுரை அருகே பள்ளத்தில் சிக்கிய லாரி
மதுரை அருகே மூடப்படாத பள்ளத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமப்பட நேரிட்டது.
தமிழின் மதுரத்தை பெயரிலேயே கொண்ட ஊர். சங்ககாலச் சுவடுகளின் அழியாத வரலாற்று சாட்சியாக எஞ்சி நிற்கும் தொன்மத்தின் தொடர்ச்சி. தமிழ் நிலம் மற்றும் பண்பாட்டு பரப்பின் இதயம் என்று மதுரையைச் சொல்லலாம். மதுரையம்பதி, கூடல் நகர், கடம்பவனம் என்று தமிழ் இலக்கியங்களில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் மதுரை நகரும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறை, கலை அறிவு, நாகரிக மேன்மை இவற்றின் அழிக்க முடியாத அடையாளங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.
மதுரை மாவட்டம், தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கில் சிவகங்கை மாவட்டம், மேற்கில் தேனி மாவட்டம் மற்றும் தெற்கில் விருதுநகர் மாவட்டம் அமைந்துள்ளது.
மதுரை, பசுமலை அருகே, சாலையில் தோண்டப்பட்டு சரிவர மூடாத பள்ளத்தினால் கவிழ்ந்த லாரி ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் உடனடியாக சாலையை சரி செய்ய கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுரை பசுமலையில், குடிநீருக்காக பிரதான சாலையின் ஓரமாக பள்ளங்கள் தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது .இந்த பணிகள் என்பது நிறைவு பெற்று பல மாதங்கள் ஆன பிறகும் கூட புதிய சாலைகள் போடாமலும் அதே போல பள்ளங்களை சரிவர மூடாத காரணத்தினால் பல்வேறு விபத்துக்கள் தொடர்கதையாக இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது.இதுவரை இந்த பள்ளத்தில் விழுந்து 4-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இன்று , கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி வந்த கணநக லாரி இரும்புகளை ஏற்றி வந்தது சரிவராக மூடப்படாத பள்ளத்தில், லாரியின் டயர்கள் சிக்கி கொண்டு,ஒரு பக்கமாக லாரி சரிந்தது சுகாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதம் இன்றியும் அவரும் எந்த வித காயம் இன்றி தப்பித்தார். உடனடியாக இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu