மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த மேயர்
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா-2023 முன்னேற்பாட்டு பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு திருவிழா-2023 முன்னேற்பாட்டு பணிகளை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்.
மதுரை மாநகராட்சி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா-2023 நடைபெறுவதை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை தெற்கு துணை ஆணையர் வ.சாய் பிரணீத், ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகராட்சி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா-2023 (15.01.2023) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி முன்னேற்பாட்டு பணிகளான மரத்தடுப்புகள் அமைத்தல், மாடுகள் உள்ளே மற்றும் வெளியே வந்து செல்லும் இடங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அமரும் இடம், வாடிவாசல், அவசர கால வழி, மருத்துவ முகாம்கள், குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள், மின்விளக்கு வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை மையம், காளைகள் வருவதற்கான வழித்தடம், புல், தண்ணீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகளையும் விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு மேயர் உத்தரவிட்டார்.
இந்து ஆய்வின் போது, மண்டலத் தலைவர் சுவிதா, கால்நடை பராமரிப்புத் துறை மரு.நடராஜன் குமார், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் சரவணன், நகரப்பொறியாளர் அரசு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி பொறியாளர் செல்வவிநாயகம், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu