மதுரை அருகே பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்
![மதுரை அருகே பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல் மதுரை அருகே பொதுப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்](https://www.nativenews.in/h-upload/2022/12/29/1635651-img-20221229-wa0057.webp)
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மதுரை,திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.
மதுரை மாநகராட்சி 93-வது வார்டுக்கு உட்பட்ட பசுமலை முனியாண்டிபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவர்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மிகவும் சிரமப்பட்ட இப்பகுதி மக்கள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், திருமங்கலம் கோட்டாட்சியர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.மேலும் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந் நிலையில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் பசுமலையில் மதுரை திருமங்கலம் சாலையில் இன்று மறியலில் ஈடுபட்டனர்.இதனால் சாலையின் இரு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று போனதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் போலீசாரிடம் தங்களுக்கு உரிய பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர் .இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கு பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இப் போராட்டத்தினால் அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu