/* */

வெள்ளைக்கல் குப்பைகள் சேகரிக்கும் மையத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

Garbage Collection Center Inspection by Madurai Corporation Commissioner

HIGHLIGHTS

வெள்ளைக்கல்    குப்பைகள் சேகரிக்கும் மையத்தில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
X

மதுரை அவனியாபுரம் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங்

மதுரை மாநகராட்சி அவனியாபுரம், வெள்ளைக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளைக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு தினந்தோறும் சுமார் 700 டன் குப்பைகள் கொண்டு சென்று தரம் பிரிக்கப்பட்டு உரமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் ,மாநகராட்சியின் நுண்ணுயிர் செயலாக்கம் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி ,அவனியாபுரம் வெள்ளைக்கல்லில் செயல்பட்டு வரும் குப்பை சேகரிப்பு மையத்தில் குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை பிரிக்கும் இடங்கள், பணியாளர்கள், திடக்கழிவு மேலாண்மைக்கு பயன்படுத்தப் படும் வாகனங்கள் மற்றும் உரம் தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு செயல்பாடுகள், தினந்தோறும் வரக்கூடிய கழிவுநீர் குறித்தும், சுத்திகரிக்கப் படும் கழிவுநீரினை புல்பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் ,அனைத்து கழிவுநீர் நீரேற்று நிலையங்களிலும் உள்ள மின்மோட்டார்களின் இயக்க நிலை குறித்தும், கழிவுநீர் சுத்திகரிக்கப்படும் கொள்ளளவு குறித்தும், வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களை ஆய்வு செய்து சரி செய்து அதன் முழு விவரத்தினை தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார் ஆணையர்.

இந்த ஆய்வின்போது, துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் ரவிசந்திரன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  2. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  4. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  6. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  7. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  8. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  9. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  10. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!