ஆம்புலன்ஸ் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மூவருக்கு கால் முறிவு

ஆம்புலன்ஸ் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் மூவருக்கு கால் முறிவு
X
காங்கேயம் அருகே, ஆம்புலன்ஸின் மீது, பைக் நேருக்கு நேர் மோதியதில் மூவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது

ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நத்தகாடையூரை சேர்ந்த சந்தோஷ் (25), சுபாஷ் (27), விவேக் (22) ஆகிய மூவர், சென்னைக்கு புறப்பட்டு சென்றபோது பரிதாபமான விபத்து ஏற்பட்டது.

மூவரும் ஸ்பிளண்டர் பிளஸ் இருசக்கர வாகனத்தில், காங்கேயம் வழியாக சென்று கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு, நத்தகாடையூர்–பழையகோட்டை சாலையில், எதிரே வந்த தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸுடன் அவர்களின் பைக் நேருக்கு நேர் மோதியது.

விபத்தின் தாக்கத்தில் மூவரும் சாலையில் உருண்டு வீழ்ந்தனர். இதில் மூவருக்கும் கால் எலும்பு முறிந்து, பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவசர சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story