மதுரையில் அதிமுக ஒபிஎஸ் அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
![மதுரையில் அதிமுக ஒபிஎஸ் அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. மதுரையில் அதிமுக ஒபிஎஸ் அணியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.](https://www.nativenews.in/h-upload/2022/08/07/1573476-img-20220807-wa0042.webp)
மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு ஒபிஎஸ் அணி மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்தனர்.
மதுரையில், எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக ஓபிஎஸ் அணி செயலாளர் மாலையணிவித்து மரியாதை செய்தார்.
மதுரையில் ,அதிமுக ஓபிஎஸ் அணி மதுரை மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்ற முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு திரளாக தொண்டர்கள் நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி கீழமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் துரைபாண்டி தலைமையில், ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் 200க்கும்மேற்பட்டோர்பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்றத் தொகுதி கீழமாத்தூர், மேலமாத்தூர், தாராபட்டி ஊராட்சி நிர்வாகிகள் கீழமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரும் கீழ மாத்தூர் கிளைச் செயலாளருமான துரைபாண்டியன் தலைமையில், மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள முன்னாள் தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவ.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஊர்வலமாகப்புறப்பட்டனர்.
நிகழ்ச்சியில், முன்னாள் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சென்றனர். இதில், நிர்வாகிகள் கீழமாத்தூர் மேற்கு கிளை சாகுல் ஹமீது, கிழக்கு கிளை சண்முகநாதன், ஆதிதிராவிடர் காலனி பாண்டி, சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சக்திவேல், அலாவுதீன், லட்சுமணன், மகேஸ்வரன் மேலமாத்தூர் சின்னையா, சித்திரன் ஆகியோர் சுமார் 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu