மதுரை மாவட்டத்தில் 1344 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி
மதுரை மாவட்டத்தில் 1344 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 81 கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.98.30 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி, மதுரை மாவட்டத்தில் 1344 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 81 கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.98.30 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர், திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம், திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் காணொலிக்காட்சி மூலம் இவ்விழா திரையிடப்பட்டது. இதனை, ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் பார்வை யிட்டனர். தொடர்ந்து, மதுரை மாவட்டத்தை சார்ந்த 1344 மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் 81 கிராம ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மொத்தம் ரூ.98.30 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஷ் சேகர். வழங்கினார்கள்.
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழக அரசு 1989 -ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி உதவியுடன் வேளாண் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டிருந்த மகளிரைக் கொண்டு மகளிர் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை அமைக்கத் தொடங்கியது. மகளிரின் முன்னேற்றத்திற்காக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் துவங்கப்பட்டது.
இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது. தற்போது, நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியதை தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஊரக பயனாளிகளான 777 பயனாளிகளுக்கு ரூ.64.99 கோடி மதிப்பீட்டிலும் நகர்ப்புற பயனாளிகளான 607 பயனாளிகளுக்கு ரூ32.36 கோடி மதிப்பீட்டிலும் கடனுதவிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.
மேலும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 23 சமுதாய பண்ணை பள்ளிகள் துவங்கிட ரூ.24.30 இலட்சம் மற்றும் இணை மானியமாக 18 குழுக்களுக்கு ரூ.71 இலட்சமும் என மொத்தம் ரூ.98.30 இலட்சம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) மகளிர் திட்டம் திட்ட இயக்கநர் காளிதாசன் , கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி.குருமூர்த்தி, வேளாண்மை துறை இணை இயக்குநர் விவேகானந்தன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu