மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி விழா: வைணவ ஆலயங்களில் திரண்ட பக்தர்கள்
![மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி விழா: வைணவ ஆலயங்களில் திரண்ட பக்தர்கள் மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி விழா: வைணவ ஆலயங்களில் திரண்ட பக்தர்கள்](https://www.nativenews.in/h-upload/2023/01/11/1641998-img-20230111-wa0021.webp)
மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார்.
மதுரை பகுதி கோயில்களில் கூடாரவல்லி விழா மதுரை பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் கூடாரவல்லி வைபவத்தையொட்டி பெருமாள், தீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதை ஒட்டி பெருமாள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் காட்சியளித்தார். மார்கழி மாதம் கூடாரவல்லி முன்னிட்டு மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயத்திலும் வர சித்தி விநாயகர் ஆலயத்திலும் மதுரை மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயத்திலும் அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயத்தில் உள்ள பெருமாள் சந்நிதியிலும் மற்றும் வைணவ திருத்தலங்களில் கூடாரவல்லி கொண்டாடப்பட்டது
இதையொட்டி பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது என்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு தீபாவளி நடைபெற்றது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு வழிபட்டனர் மதுரையில் உள்ள அழகர் கோயில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சோழவந்தான் ஜனகை நாராயண பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளில் அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையாக நின்று பெருமானை தரிசித்தனர்.
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கூடாரவல்லி விழா
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கூடாரை வல்லி விழா இன்று (11.01.2023) அதிகாலை 5.30 மணி முதல் 7.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பல்லாண்டு, ஸ்ரீ தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி, ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சி, ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை மற்றும் ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த திருவெம்பாவை ஆகியவற்றை கல்லூரியின் பஜனைக் குழுவினர் பாடினர். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் முதல்வர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மனந்த கூடாரைவெல்லி பேருரை ஆற்றினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். காயத்ரி ஜெபம், மங்கள ஆரத்தி பிரசாதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu