சுதந்திரதின விழா: மதுரை ஆயூதப் படை மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்

சுதந்திரதின விழா: மதுரை ஆயூதப் படை மைதானத்தில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்
X

சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்டார் :

ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்டார் :

இந்தியா முழுதும் 75 சுதந்திர தினம் நிறைவு பெற்று, 76 வது சுதந்திர தினம் தொடக்கம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.காவல் துறையின் பல்வேறு படைப்பிரிவுகளின் மரியாதையை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.வருவாய்த்துறை, மீன்வளத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 40 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்பு, மகளிர் குழு கடன், விலையில்லா தேய்ப்பு பெட்டி, மீன் வளர்ப்பு என 67,00,922 ரூபாய் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.பள்ளிக்கல்வித்துறை, வணிக வரித்துறை, கால்நடைத்துறை, சமூக ஆர்வலர்கள் என 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்தார்.7 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க், மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், மாவட்ட எஸ்.பி .சிவ பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், கூடுதல் ஆட்சியர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags

Next Story