மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: மேயர் பங்கேற்பு

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள்: மேயர் பங்கேற்பு
X

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகமானது மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

சாலை வசதிகள் வேண்டி 9 மனுக்களும் என மொத்தம் 68 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது.

மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகமானது மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம்- 1 (கிழக்கு) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் , காலை 10.00 மணிக்கு தொடங்கி 12.30 மணி வரை நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்க்கும் முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் வேண்டி 9 மனுக்களும், புதிய சொத்து வரி விதிப்பு வேண்டி 11 மனுக்களும், சொத்துவரி திருத்தம் தொடர்பாக 19 மனுக்களும், காலிமனை வரி விதிப்பு வேண்டி 14 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 மனுக்களும், குடிநீர், பாதாளச்சாக்கடை மற்றும் சாலை வசதிகள் வேண்டி 9 மனுக்களும் என மொத்தம் 68 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து மேயரால், நேரடியாக பெறப்பட்டது. இம்முகாமில், சொத்துவரி பெயர் மாற்றம் மற்றும் புதிய வரி விதிப்பு வேண்டி விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு உரிய அனுமதி ஆணையினை, மேயர், ஆணையாளர் ஆகியோர் வழங்கினார்கள்.

இம்முகாமில், மண்டலத்தலைவர் வாசுகி, உதவி ஆணையாளர் காளிமுத்தன், நிர்வாக அலுவலர் ரெங்கராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி வருவாய் அலுவலர் ராஜாராம், உதவி செயற் பொறியாளர்கள் ஆரோக்கிய சேவியர், முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், உதவிப் பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story