மதுரையில் போதை ஒழிப்பு: அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

மதுரையில் போதை ஒழிப்பு: அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
X

 கூட்டத்தில் ஆட்சியர் அனீஸ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோன்,காவல் துறை கண்கானிப்பாளர் சிவபிரசாத்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அரசு 

மதுரை மாவட்டத்திலுள்ள, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

போதை ஒழிப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ்சேகர் தலைமை வகித்து பேசியதாவது: மதுரை மாவட்டத்திலுள்ள, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் போதை பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், குறிப்பாக ,போதை பொருள் விற்பனை ஈடுபடும் நபர்கள் மீது கடமையான நடவடிக்கை எடுப்பதற்கும் போதை பொருள் விற்பனை செய்யும் கடைகளில் கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு, சீல் செய்திடவும் உணவு மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரியில் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக தனியாக ஆலோசனை வழங்கியதோடு, பெற்றோருக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

அனைத்து பள்ளி மற்றும் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான மற்றும் தீமைகளை குறித்து விளம்பர பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில், அமைந்துள்ள அனைத்து கல்லூரி மற்றும் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 11.8.22 முதல் கொண்டாடப்பட உள்ளது .

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தி மாணவ மாணவியர்களிடம் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி ,அனைத்து துறையிலும் அலுவலர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர் தெரிவித்தார் .

இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் காலோன், காவல் துறை கண்கானிப்பாளர் சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story