மதுரையில் விழிப்புணர்வு மனித சங்கிலி : நிதி அமைச்சர் தொடக்கம்

மதுரையில் விழிப்புணர்வு மனித சங்கிலி : நிதி அமைச்சர் தொடக்கம்
X

காற்று மாசுபாடு குறித்து மதுரையில்  நடைபெற்ற  விழிப்புணர்வு மனித சங்கிலியை தொடக்கி வைதத்த  நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன்

காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார்

மதுரையில் காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை , நிதி மற்றும் மனிதவளமேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தொடக்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகில் காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் .சிம்ரன்ஜீத் ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், துவக்கி வைத்தார்.

மத்திய அரசின் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து தேசிய பசுமைப்படை மாணவர்கள் பங்குபெற்ற காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணியை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இந்த மனித சங்கிலி பேரணியில் இளங்கோ மாநகராட்சி பள்ளியை சார்ந்த சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்மனித சங்கிலி பேரணியில் பள்ளி மாணவர்கள் காற்று மாசு தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை சொல்லிகொண்டு நின்றனர். மேலும், இப்பேரணியில், காற்று மாசு தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மனித சங்கிலி பேரணியில், நெகிழி பைகளின் பயன்பாட்டினை தவிர்க்கும் பொருட்டு மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் பொதுமக்களுக்கு துணிப்பைகளை, அமைச்சர், மேயர் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவான்சு நிகம், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் உஷா , மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மதுரை மாவட்ட கல்வி அலுவலர் கு.முரளி, மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி , உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன் , மாநகராட்சி கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன்இ மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மதுரை கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல், மாமன்ற உறுப்பினர் வேல்முருகன், திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story