மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 3  பேர் சாவு
X

பைல் படம்

மதுரையில் நடந்த பல்வேறு சம்பவங்களில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்

மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேர் தற்கொலை

மதுரை, யாகப்பாநகர் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்முத்துக்குமார்(42.). இவர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கை வீட்டில் தங்கி வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய சகோதரி அல்லிராணி அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமாரின் சாவுக்கான காரணம் குறித்து சாரணை நடத்தி வருகின்றனர்.

வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பால்ராஜ் மகன் மணிகண்டன் பிரபு 30. இவருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது .இதனால் மன அழுத்தத்தில் இருந்தவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய தந்தை பால்ராஜ் கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டபிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவில் விஷம் கலந்துகுடித்து வாலிபர் தற்கொலை

ஜெய்ஹிந்துபுரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கார்த்தீசன்(35 ).இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவர் ஒத்தக்கடை மெயின் ரோட்டில் சென்றபோது மயங்கி விழுந்தார் .உயிரருக்கு போராடிய கார்த்தீசனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் .இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி பகவதிகாமாட்சி ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ ஆவணி மூல வீதியில் மயங்கி விழுந்த வாலிபர் பலி

தெற்கு வாசல் மஞ்சணக்கார தெரு சிங்கார தோப்புவை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம்( 38.). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது .திருமணம் ஆகவில்லை .காய்ச்சலும் இருந்து வந்தது .இந்நிலையில் கீழ ஆவணிமூலவீதியில் ஹோட்டல் முன்பாக நடந்து சென்ற போது திடீரென்று மயங்கி விழுந்து பலியானார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா பொன்னம்மாள் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிராமலிங்கத்தின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணி நகரத்தில்நடந்து சென்ற பெண்ணிடம் 10 பவுன் செயின் பறிப்பு

மதுரை மணிநகரம் கொடிக்கால்கார தெற்கு தெருவை சேர்ந்தவர் சுதர்சன் மனைவி கார்த்திகா(34.)இவர் மணிநகரம் மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார் .அப்போது பைக்கில் சென்ற இரண்டு ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து கார்த்திகா திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் செயின்பறித்த பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகே குப்பை தொட்டியில் பெண் குழந்தை வீச்சு

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டு அருகே குப்பை தொட்டியில் பெண் குழந்தை ஒன்று வீசப்பட்டு கிடந்தது .அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனை போலீசார் சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது .இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து குப்பைத்தொட்டியில் குழந்தையை வீசிய பெற்றோர் யார் என்று யார் என்று போலீசார் தேடி வருகின்றனர்.


Tags

Next Story