/* */

4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் 4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

HIGHLIGHTS

4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்
X

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் 4 மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையிம் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மாவட்டத்தை பொருத்துவரை தற்போது 7444 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 173 பேர் பலியாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2144 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் 1438 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும், 139 படுக்கைகள் ஐ.சி.யு படுக்கையாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாவட்டத்தில் போதிய படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிள்ளனர்.

குறிப்பாக இன்று கிருஷ்ணகிரி ராஜாஜி நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனை வாயிலில் நிறுத்தப்பட்ட அம்புலன்ஸ் வாகனத்திலேயே பரிதாபமாக பலியானார். 34 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அங்கு மேல் சிகிச்சைக்கான வசதி இல்லாததால் மருத்துவமனையில் இருந்து அவரது உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வந்தனர். ஆனால் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 8.30 மணி முதல் 4 மணி நேரமாக படுக்கை வசதி கோரியும் மருத்துவமனை சார்பில் படுக்கை வசதியை ஏறடுத்தி கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்ததால் நோயாளி பிரேம்குமார் பரிதாபமாக ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பலியானார்.

ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிருக்கு போராடும் பிரேம்குமாரை காப்பாற்ற உறவினர்கள் போராடும் அந்த கடைசி நிமிட போராட்டம் மனதை உருக்கும் விதமாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7444 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற கூடிய நிலையில் மூன்றில் ஒரு பங்கான 2144 படுக்கைகள் மட்டுமே மருத்துவமனைகளில் உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் மூச்சு திணறல் காரணமாக அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

Updated On: 24 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எனக்கு தாலாட்டு பாடிய 'இரண்டாம் தாய்' அக்காவுக்கு பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  7. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  9. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  10. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....