/* */

விதை விற்பனை நிலையங்களில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு

கிருஷ்ணகிரியில், விதை விற்பனை நிலையங்களில் வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

விதை விற்பனை நிலையங்களில்   வேளாண்மைத்துறை துணை இயக்குநர் ஆய்வு
X

விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன், கிருஷ்ணகிரியில் விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தற்சமயம் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கரீப் பருவத்திற்கு ஏற்ற விதைகள், குறிப்பாக நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள், பயறு வகைகள், பருத்தி வகைகள் ஆகியன, 256 விதை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், விதை ஆய்வு துணை இயக்குனர் பச்சையப்பன், கிருஷ்ணகிரியில் உள்ள விற்பனை நிலையங்களில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பருத்தி விதைகள், நெல் ராசி 472, அக்‌ஷயா நெல், கொத்தமல்லி, டாடா திவ்யா ஆகிய விதைகள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்விற்கு பின்னர், விதை ஆய்வு துணை இயக்குனர் கூறியதாவது: இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்திற்கும் உண்மை நிலை சான்று அட்டை விவரம் அச்சிடப்பட்டுள்ளது. இதில், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள், முளைப்பு விபரம், புறத்தூய்மை, நிகர எடை, பருவம் போன்ற விபரங்கள் சரிபார்க்கப்பட்டன.

என்ரோல்மெண்ட் செய்யப்பட்ட விபரமும், முளைப்பு பரிசோதனை விபரங்கள் கொள்முதல் பட்டியல், விற்பனை ரசீதுகள் ஆகியவையும் பராமரிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தெரியும்படி விலை விவரப்பலகை வைக்கப்பட்டுள்ளது. விதை உரிமம் புதுப்பிக்கப்பட்டு, சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, கூறினார்.

Updated On: 26 Jun 2021 9:22 AM GMT

Related News