/* */

தைப்பூசம்: கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு திரண்ட பக்தர்கள்

தைப்பூசத்தையொட்டி கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு அரசு தடை உத்தரவை மீறி பக்தர்கள் திரண்டனர்.

HIGHLIGHTS

தைப்பூசம்: கரூர் வெண்ணெய் மலை முருகன் கோவில் முன்பு திரண்ட பக்தர்கள்
X

மூடப்பட்ட வெண்ணெய் மலை முருகன் கோவில் முன் பக்தர்கள் திரண்டு நின்றனர்.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வழிபாட்டு தலங்களை 5 நாட்கள் மூட தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தைப்பூசம் என்பதால் கரூர் நகரையொட்டிய வெண்ணைமலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில் மூடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் மலைக் கோவிலுக்கு முன்பாகவே தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அவற்றையும் மீறி அப்பகுதிக்கு வரும் பக்தர்கள் கோவில் கிணறுக்கு முன்பாக கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டுச் செல்கின்றனர். மேலும், தைப்பூசத்தை முன்னிட்டு தேர் வடம் பிடித்து பக்தர்களால் மலையை சுற்றி வருவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தேர் வடம் பிடித்தலும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் அவற்றை தொட்டு சாமி கும்பிட்டுச் செல்கின்றனர். பால்குடம் எடுத்து வரும் பக்தர்களிடமிருந்து கோவில் ஊழியர்கள் பால் குடங்களை வாங்கிச் செல்கின்றனர். பக்தர்களின் வருகை குறைவாக இருந்தாலும், அவர்கள் வெளிப் பகுதியில் சாமி கும்பிடவும் அனுமதிப்பதால் தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் அப்பகுதி பக்தர்களால் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 18 Jan 2022 10:48 AM GMT

Related News