பவுர்ணமியை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி

பவுர்ணமியை முன்னிட்டு குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர ஆரத்தி

குமரி முக்கடல் சங்கமிக்கும் இடத்தில், தை மாத பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மகா சமுத்திர ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

பவுர்ணமியை முன்னிட்டு, குமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தியில் திரளானோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டா் பேரவை சாா்பில், ஒவ்வொரு பவுர்ணமி நாளில் குமரி முக்கடல் சங்கமத்தில், மகா சமுத்திர ஆரத்தி நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரசித்தி பெற்ற மகா சமுத்திர ஆரத்தி வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பஞ்ச சங்கு நாதம், மாதா பிதா குரு வேண்டல், குலதேவதை, இஷ்ட தேவதை, கிராம தேவதை வேண்டுதல், சப்த கன்னிகள் பூஜை, 27 சுமங்கலிகள் அகல் தீபத்துடன் நெய் தீபம் ஏற்றுதல், சமுத்திர அபிஷேகம், தூபம் ஆரத்தி ஆகியவை நடைபெற்றன.

தொடர்ந்து நடைபெற்ற மகா சமுத்திர ஆரத்தியை, முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சிறப்பு அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Tags

Next Story