மின்சாரம், பால் விலை உயர்வை கண்டித்து பி.எஸ்.பி. கட்சி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மின்சாரம், பால் விலை உயர்வை கண்டித்து பி.எஸ்.பி. கட்சி ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு கண்டித்து பி.எஸ்.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் முழுவதும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலந்த நபர்களை கண்டித்தும், புதிய மோட்டார் வாகன சட்டம் , மின் கட்டணம் , பால் விலை உயர்வை திரும்ப பெற தமிழக அரசு கோரி மக்கள் வேதனை போராட்டம் என்ற தலைப்பின் கீழ் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் மைக்கேல் தாஸ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மக்கள் நலனை கருதாமல் பணத்தை பறிக்கும் நோக்கத்தில் தமிழக அரசு வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, மின்சார கட்டணம் உள்ளிட்ட அடிப்படை தேவை பொருட்களின் விலை உயர்வை ஏற்றி வஞ்சிக்கும் நிலையினை கைவிடக் கோரி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தால் அபராதங்கள் 10 மடங்கு உயர்வு பெற்றும், ஏழை எளிய மக்கள் தங்கள் தொழில்களுக்கு செல்ல முடியாத அளவில் காவல்துறையினரால் அபராதம் விதிக்கப்படுவதும் அதைக் கட்ட இரு நாட்கள் நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாவதாகவும் , அதேபோல் மின்சார கட்டணம் உயர்ந்து தங்களின் வருமானத்தின் இரண்டாவது பகுதி வீணாவதாகவும் , குடும்பத்தின் முக்கிய தேவையான பாலின் விலை உயர்வு ஏழை எளிய மக்களுக்கு பெரிதும் பேரிடியாக தற்போது விளங்கி வருவதும் நிலையற்ற தன்மையில் அவ்வப்போது விலை ஏற்றத்திற்கு தமிழக அமைச்சர்கள் பல்வேறு காரணங்கள் கூறுவது கண்டிக்கத்தக்கது எனவும் பொதுக்கூட்டத்தில் கூறப்பட்டது.

விடியல் மற்றும் திராவிட மாடல் அரசாங்கம் எனக் கூறி வரும் தி.மு.க.ஆட்சியில் சாமானிய மக்களின் வாழ்வு இருண்டு போனது மட்டுமல்லாமல் பொருளாதார சிதைவையும் கண்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்களை இன்று வரை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்றும், சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு வழக்கு மாறிய நிலையிலும் இது குறித்த முன்னேற்றம் ஏதும் இல்லாதது பட்டியலின மக்களை வருத்தமடைய செய்து உள்ளது எனவும் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் செங்கல்பட்டு பகுதி நிர்வாகிகளும் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2023 1:01 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 2. திருவண்ணாமலை
  நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
 3. தமிழ்நாடு
  98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து! அமைச்சர் தகவல்
 4. திருவண்ணாமலை
  சிறப்பு காவலர் பணிக்கு முன்னாள் ராணுவத்தினர் சேர்ப்பு
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலையில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நிகழ்ச்சி
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து...
 7. திருச்செந்தூர்
  மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கனிமொழி
 8. அரசியல்
  அமித்ஷா போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியின் அரசியல் பின்னணி
 9. உலகம்
  ரஷ்ய நாட்டு இளைஞர்களுக்கு அதிபர் விளாடிமிர் புதினின் புதிய வேண்டுகோள்
 10. அரசியல்
  சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்