மோடி அரசு அளித்த எந்த வாக்குறுதிகளையும் கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை - டி.ஆர்.பாலு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் டி ஆர் பாலு எம்.பி தலைமையில் நடைபெற்றது
District Development Meet
2014 இல் அளித்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறாத நிலையில் பெரும் வார்த்தைகளால் மட்டுமே செயல்படுவதாக டி ஆர் பாலு எம்.பி குற்றச்சாட்டு தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் அதன் தலைவர் டி ஆர் பாலு எம்பி தலைமையில் நடைபெற்றது.இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன் சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி மற்றும் கடந்த கூட்டங்களில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிலை குறித்து பல்துறை அலுவலர்கள் விளக்கம் அளிக்க அவர்களிடம் பணி நிலைகளைக் கேட்டு தெரிந்து கொண்டார்.இதன்பின் செய்தியாளிடம் பேசுகையில் , சிலிண்டர் விலை 100 குறைக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது, கடந்த 2014இல் மோடி அளித்த வாக்குறுதிகளான டீசல் பெட்ரோல் விலை மற்றும் சிலிண்டர் உள்ளிட்டவைகள் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்து நேரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக இதனை நிறைவேற்றாத வாக்குறுதிகளாக உள்ளது என்பது அனைவருக்கும் அறிந்ததே. வெறும் வாக்குறுதிகளை வாயால் மட்டும் வடை சுடுவதாக நமது தோழர்கள் கூறுவது உண்மையே.
மேலும் , பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக மீடியாக்கள் தான் அவர்களை தூண்டி விடுவதாகவும் அவர்கள் விருப்பப்பட்டு பணம் பெற தயாராக உள்ளனர்.மேலும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட என்னை போல் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தலைமை மட்டுமே முடிவு செய்யும் என தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது எனவும் அனைத்து பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
பாண்டிச்சேரி சிறுமி விவகாரம் குறித்து கேட்டபோது பெற்றோர்கள் குழந்தைகள் வளர்ப்பில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர்களை கண்காணிக்கவும் வேண்டும் எனவும் குற்றம் குழந்தைகள் வளர்ப்பில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும் எனவும் அவர்களை கண்காணிக்கவும் வேண்டும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu