இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு..!

ஆட்டையாம்பட்டி:
இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம், நகராட்சிமன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணை தலைவா் தளபதி, உத்தரகுமாா், செல்வம், மணிகண்டன், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மகாலட்சுமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
கூட்டுறவு செயலாளா் சண்முகம் தலைமை வகித்தாா். முதல்வா் மருந்தகத்தை செயல் ஆட்சியா் ராதா திறந்துவைத்தாா். முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். கூட்டுறவு துறை முனியாண்டி, திமுக கெங்கவல்லி ஒன்றிய திமுக செயலாளா் சித்தாா்த்தன், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu