நவம்பர் 1ல் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நகர சபை கூட்டங்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியுவராஜ் ( கோப்பு படம்)
தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வருடத்திற்கு நான்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22ஆம் தேதி உலக நீர் தினம் , மே 1 தொழிலாளர் தினம் , ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி , நவம்பர் 1 உள்ளாட்சி தினம் ஆகிய நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கூடி கிராம அடிப்படை வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இதேபோல் கிராம வளர்ச்சிக்கு எதிராக உள்ள திட்டங்களை தவிர்ப்பது குறித்து விவாதங்கள் நடைபெற்று அது குறித்த நடவடிக்கைகள் நிலை தெரிவிக்கப்படும்.
இந்நிலையில் வருகிற நவம்பர் ஒன்றாம் நாள் உள்ளாட்சி தின நாள் என்பதால் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின் முதல் முறையாக பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி ஆகியவைகளிலும் நகர சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவித்தார்.
இதற்காக வார்டு தூறும் வார்டு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது வார்டு கவுன்சிலர் தலைவராக செயல்படுவார் செயலராக உதவியாளர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்படுவர். இவர் நகர சபை கூட்டம் நடக்கும் இடம் மற்றும் தேதி நேரம் இவற்றை அப்பகுதியில் பொது மக்களுக்கு தெரிவிப்பார்.
அவ்வகையில் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் நகர சபை கூட்டம் அந்தந்த வார்டுகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
51 வார்டுகளை நாலு மண்டலங்களாக பிரித்து அந்த பகுதி வார்டு செயலர்களை நியமித்து கமிட்டி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி ஊராட்சி ஆணையர் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதன்முறையாக நகர சபை கூட்டம் நடைபெற உள்ளதால் இதற்கான அலுவலர்கள் , கமிட்டி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற உள்ளது.
நவம்பர் 1 இல் நடைபெற உள்ள நகர சபை கூட்டத்தில் வார்டில் நடக்கும் பணிகள், வரும் காலங்களில் வளர்ச்சிக்கு தேவையான பணிகள், பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிராமங்களில் மட்டுமே கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் , முதன்முறையாக வார்டுகள் வாரியாக நகர சபை கூட்டங்கள் அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறுவதால், பொதுமக்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் பகுதி பிரச்சினையை தீர்வு காண்பதும், வரும் காலங்களுக்கு தேவையான வளர்ச்சிகளை திட்டமிடுதலும் சிறப்பாக அமையும் என்பதால் இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu