சேலம் வழியாக புதிய சிறப்பு ரயில்

சேலம் வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு
தெற்கு ரயில்வே நிர்வாகம் சேலம் வழியாக சிறப்பு ரயில் சேவையை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு:
பெங்களூரு - மங்களூரு சிறப்பு ரயில் இன்று இரவு 11:55 மணிக்குப் புறப்பட்டு பங்காருப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் மாலை 4:00 மணிக்கு மங்களூருவை அடையும். இந்த ரயில் 18-ஆம் தேதி அதிகாலை 5:05 மணிக்கு சேலம் வந்து, 6:10 மணிக்கு ஈரோடு வந்து செல்லும்.
திரும்பும் வழியில், அதே ரயில் வரும் 20-ஆம் தேதி மதியம் 2:10 மணிக்கு மங்களூருவிலிருந்து புறப்பட்டு, அடுத்தநாள் காலை 7:30 மணிக்கு பெங்களூருவை அடையும். இந்த ரயில் 21-ஆம் தேதி அதிகாலை 12:50 மணிக்கு ஈரோடு வந்து, 1:47 மணிக்கு சேலம் வந்து செல்லும்.
செகந்திராபாத் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதால், நாந்தெட் - ஈரோடு வார ரயில் வெள்ளிக்கிழமை மதியம் 2:20 மணிக்குப் புறப்பட்டு சேலம் வழியாக அடுத்தநாள் மதியம் 2:00 மணிக்கு ஈரோடு வந்து சேரும். இந்த ரயில் மே 2-ஆம் தேதி முதல் செகந்திராபாத் செல்லாமல், தயானந்த் நகர், சார்லபள்ளி வழியாக இயக்கப்படும்.
திரும்பும் வழியில், ஈரோடு - நாந்தெட் ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5:15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7:30 மணிக்கு நாந்தெட்டை அடையும். இந்த ரயில் மே 4-ஆம் தேதி முதல் செகந்திராபாத் செல்லாமல், சார்லபள்ளி, தயானந்த் நகர் வழியாக இயக்கப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu