ஈரோடு கிழக்கில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் கடந்த தேர்தலை விட 6.98 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவு

ஈரோடு கிழக்கில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தும் கடந்த தேர்தலை விட 6.98 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவு
X

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.97 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.97 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2023ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலுடன் ஒப்பிடுகையில் 6.98 சதவீதம் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் மற்றும் 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல்களை விட தற்போதைய தேர்தலில் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. 2021ம் ஆண்டு தேர்தலில் 66.24 சதவீத வாக்குகளும் 2023ம் ஆண்டு 74.79 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன.

விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து, மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்காமல் தவிர்த்திருப்பது அரசியல் கட்சிகள் மீதான கோபத்தை காட்டுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் முடிவின் போது எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்து உள்ளது. மக்களின் இந்த தேர்தல் வெறுப்பு தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று முக்கிய அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story