ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்!
X
ஈரோடு இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்படும் பணியில் 150 பேர் ஈடுபட்ட பணியில் அதிகாரிகள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியதுஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இப்பணியில் 150 அலுவலர்கள் ஈடுபட்டனர்.

தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் முன்னிலையில் பணியாளர்களுக்கு முறையான செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 237 வாக்குச்சாவடிகளுக்கு மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 308 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் 16 வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே பொருத்த முடியும் என்பதால், மொத்தம் 46 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா உட்பட 47 பெயர்களை பதிவு செய்ய ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். இதற்காக 20 சதவீதம் கூடுதல் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் அச்சிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் அடங்கிய தாள்கள் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த பணி மூன்று நாட்களில் முடிவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் இந்த இயந்திரங்கள் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு, தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படும்.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்