கண்தானம் செய்ய உறுதிமொழி ஏற்ற ஈரோடு மாநகராட்சி மேயர்
Erode News- கண்தான விழிப்புணர்வு பேரணியை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கொடியசைத்து துவக்கி வைத்த போது எடுத்த படம்.
Erode News, Erode News Today- ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாநகராட்சி மேயர் நாகரத்தினம் கண்தானம் செய்ய உறுதிமொழி ஏற்றார்.
தேசிய கண் தான விழிப்புணர்வு தினம் இன்று (2ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி, ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது இரண்டு கண்களையும் தனமாக வழங்க சம்மதம் தெரிவித்து உறுதிமொழி ஏற்றார்.
பின்னர், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி அகர்வால் கண் மருத்துவமனை முன்பு தொடங்கி பெருந்துறை சாலை வழியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முடிந்தது. இந்த பேரணியில் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஊழியர்கள், வேளாளர் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பொதுமக்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் பேசும்போது, தமிழ்நாட்டில் கண் தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அதை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நபர் கண்தானம் செய்தால் நான்கு பேர் கண் தானம் பெற முடியும். எனவே ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் கண்களை தானமாக வழங்குவதற்கு உறுதிமொழி வழங்க முன் வர வேண்டும். இதனால் 100 சதவீதம் கண் தானம் அளிப்பவர்கள் உள்ள மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தை அறிவிக்க இயலும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu