மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் அரசின் முதல் பரிசு பெற்று ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சாதனை

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் அரசின் முதல் பரிசு பெற்று ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சாதனை
X
Erode News- தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் முதல் பரிசு பெற்ற ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி.
Erode News- மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் தமிழக அரசின் முதல் பரிசு பெற்று ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சாதனை படைத்தது.

Erode News, Erode News Today- மீண்டும் மஞ்சப்பை திட்டத்தில் தமிழக அரசின் முதல் பரிசு பெற்று ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி சாதனை படைத்தது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுக்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மஞ்சப்பை திட்டத்தை 2023-2024ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து, கல்லூரி மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி நடைமுறைப்படுத்தும் கல்லூரிக்கு தமிழக அரசு விருதும், அங்கீகாரமும் வழங்குகிறது.


தமிழக அளவில் இத்திட்டத்தில் கலந்து கொண்ட கல்லூரிகளில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லூரி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி 2023-2024ம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் நடைபெற்ற விழாவில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரிக்கு விருது மற்றும் முதல் பரிசான ரூபாய் ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.


மஞ்சப்பை விருதுத் திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இவ்விருது கிடைப்பதற்கு காரணமாக இருந்த கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன், சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.கார்த்திகேயன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும், அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் ஆர்.குமாரசாமி, செயலாளர் பி.சத்தியமூர்த்தி, பொருளாளர் கே.வி.ரவிசங்கர் மற்றும் கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், எப்பொழுதும் நமது கல்லூரி வளாகம் பிளாஸ்டிக் மற்றும் நெகிழிப் பைகள் பயன்பாடு இல்லாத பசுமை வளாகமாகத் திகழ்வதற்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags

Next Story
கோடைக்காலம் வந்துவிட்டாலே நுங்கு தான் !..இந்த நுங்கு நம்ம உடம்புக்கு என்னென்ன நன்மைகளை தருதுனு..பாக்கலாமா..!