ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறய 1,753 பேர் மீது வழக்கு

ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறய 1,753 பேர் மீது வழக்கு
X

Erode news- தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிப்பது போன்ற மாதிரிப் படம்.

Erode news- ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,753 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.2.73 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

Erode news, Erode news today- ஈரோடு மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 1,753 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.2.73 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

ஈரோடு மாநகரில் சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை இயக்கி வருவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் ஜவகர் உத்தரவின்படி, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, காளைமாட்டுச் சிலை, ஆட்சியர் அலுவலகம், மூலப்பாளையம் சந்திப்பு, கொல்லம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இதில், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 42 வழக்குகள், போக்குவரத்து சிக்னலை மீறியதாக 38 வழக்குகள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 1,064 வழக்குகள், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக 75 வழக்குகள், அதிக உயரத்துக்கு வாகனங்களில் பாரம் ஏற்றி சென்றதாக 3 வழக்குகள், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றியதாக 3 வழக்குகள், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக 71 வழக்குகள் மற்றும் இதர வழக்குகள் என மொத்தம் 1,753 வழக்குகள் பதிவு செய்து, வாகன உரிமையாளர்களுக்கு ரூ.2.73 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும், இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 18 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil