போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள்
X

ஈரோட்டில் நடந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.

ஈரோட்டில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோட்டில் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை, ஈரோடு மாவட்ட காவல் துறை இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான மற்றும் போதை பொருளிலிருந்து இளைய சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

இந்த விழிப்புணர்வுப் பேரணியை காவல்துறை துணை ஆய்வாளர் பிரபாகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பன்னீர்செல்வம் பூங்காவில் தொடங்கிய பேரணி பிஎஸ்என்எல் அலுவலகம், கலைமகள் கல்வி நிலையம், செங்குந்தர் பள்ளி வழியாக ஈரோடு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே நிறைவடைந்தது.

இப்பேரணியில் போதையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை மீட்டெடுப்போம், போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம், போதைப் பழக்கத்திற்கு எதிராக அணி திரள்வோம் என்ற உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை மாணவ மாணவிகள் எழுப்பினர். மேலும் "மரணத்தை பரிசளிக்கும் போதை பொருள் வேண்டாம்" "மது நாட்டுக்கும் உயிருக்கும் கேடு" "போதையில் நீ வீதியில் உன் குடும்பம்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர்.

பேரணிக்கு முன்னதாக போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ஜனனி வாசிக்க அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். அதன்படி போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை அறிவோம். குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்போம், போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுப்போம் நல்வழிப்படுத்துவோம் என்ற உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இப்பேரணியில், கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி, தலைவர் வி.ராஜமாணிக்கம், கல்லூரியின் முதல்வர், இயக்குனர், துறை சார்ந்த பேராசிரியர்கள், மற்றும் 200 மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஜலதோஷத்துக்குலாமா டாக்டர் கிட்ட போறீங்களா..? இனிமே இத பண்ணுங்க..!