/* */

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில், மத்திய அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

தர்மபுரி போக்குவரத்து கழக டவுன் டெப்போ முன்பு, தொமுச மண்டல தலைவர் சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரியில், தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கையாள்வதாகக்கூறி, அனைத்து தொழிற்சங்கம் சார்பில், தர்மபுரி போக்குவரத்து கழக டவுன் டெப்போ முன்பு, தொமுச மண்டல தலைவர் சின்னசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிடவேண்டும். பொதுத்துறை சொத்துக்களை சீர்குலைக்கும் தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.

44 தொழிலாளர் நல சட்டங்களை, 4 சட்ட தொகுப்புகளாக திருத்துவதை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும். அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மண்டல தலைவர் ரவி, ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் சென்னகேசவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் சிஐடியூ, விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கம், ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 24 Sep 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!