/* */

விடுமுறையையொட்டி கடலூர் வெள்ளி கடற்கரையில் மக்கள் குவிந்தனர்

இரண்டு நாட்களுக்குப் பிறகு கடலூர் வெள்ளி கடற்கரையில் இன்று அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

விடுமுறையையொட்டி கடலூர் வெள்ளி கடற்கரையில் மக்கள் குவிந்தனர்
X

கடலூர் வெள்ளி கடற்கரையில் விடுமுறை நாளான இன்று  மக்கள் குவிந்தனர்.

கொரானா மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31 மற்றும் ஒன்றாம் தேதி ஆன நேற்றும் என தமிழகம் முழுவதும் இருநாட்கள் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினமான இன்று கடலூர் வெள்ளி கடற்கரையில் அதிக அளவில் பொது மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் கடலூரில் எவ்வித தடையும் இல்லை, ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் முகக் கவசம் இன்றியும் சமூக இடைவெளி இன்றியும் குவிந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்தனர்.

பொதுமக்கள் நோய் பரவலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Jan 2022 3:50 PM GMT

Related News