செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு IOC-ல் வேலை: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

chess master praggnanandhaa- செஸ் மாஸ்டர் பிரக்ஞானந்தா.
Praggnanandhaa Salary-உலகின் தலைசிறந்த 16 வீரர்கள் பங்கேற்கும் செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா, இரண்டாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார்.
பின்னர் பிரக்ஞானந்தா காலிறுதியில் சீனாவின் வெய் யியையும், அரையிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியையும் தோற்கடித்தார். ஆனால் இறுதிப் போட்டியில் சீனாவின் திங் லைரிடம் தோற்றார். வெற்றி வாய்ப்பு இருந்தும் தனது சிறிய தவறினால் தோல்வியடைந்து 2வது இடத்தை பிடித்தார்.
செசபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 2வது இடத்தைப் பிடித்த இளம் இந்திய செஸ் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என இந்தியன் ஆயில் அறிவித்துள்ளது. தற்போது 16 வயதாகும் பிரக்னாநந்தா 18 வயது ஆனவுடன் பணியில் சேருவார் என இந்தியன் ஆயில் தெரிவித்துள்ளது. தற்போது 11ம் வகுப்பு படித்து வரும் பிரக்ஞானந்தா பொது தேர்வு எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரக்ஞானந்தாவுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
chess master praggnanandhaa-18 வயது ஆனவுடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பட்டியலிடப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரக்ஞானந்தா சம்பளம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்றாலும், அவரது சம்பளம் ஆண்டுக்கு 7 இலக்கங்களில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக, அவரது சம்பளம் பல லட்சங்களில் இருக்கும் என்பது தெரிகிறது.
சென்னையில் பிறந்த பிரக்ஞானந்தா 5 வயதில் இருந்தே உலகம் முழுவதும் பல நாடுகளுக்குச் சென்று செஸ் விளையாடி வருகிறார். ஏழு வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தையும் வென்று, இளைய சர்வதேச செஸ் மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னுதாரண சிறுவன் :
திறமை இருந்தால் சாதிக்கலாம் என்பதை இந்த 16 வயது சிறுவன் பிரக்ஞானந்தா நிரூபித்துள்ளார். இளைய தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்னுதாரணம், இவரே.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu