தோட்ட தகராறு கொலை முயற்சியாக மாறியதால் சென்னிமலையில் பரபரப்பு

தோட்ட தகராறு கொலை முயற்சியாக மாறியதால் சென்னிமலையில் பரபரப்பு
X
தோட்ட தகராரில் வாக்குவாதம் வன்முறையாக மாறியதால் ஜோதிலட்சுமி மீது டிராக்டரை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.

டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியனில் பரபரப்பான சம்பவம் நடந்தது.

முருங்கத்தொழுவு ஊராட்சியில், புறம்போக்கு நிலத்தில் தங்கவேல் (65) என்பவர் தனது டிராக்டரில் மண் எடுத்து தனது தோட்டத்தில் போட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி (46), இதற்கெதிராக தகராறு செய்து, டிராக்டரை நிறுத்த முயற்சித்துள்ளார்.

வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், தங்கவேல் ஜோதிலட்சுமி மீது டிராக்டரை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜோதிலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக, பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
future ai robot technology