தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஜார்ஜியா சென்று மருத்துவம் படிக்கலாம்

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஜார்ஜியா சென்று  மருத்துவம் படிக்கலாம்
X

ஜார்ஜியா நாட்டில் மருத்துவம் படிப்பது குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்புகூட்டம்.

தடுப்பூசி செலுத்திக் கொண்வர்கள் ஜார்ஜியா சென்று மருத்துவம் படிக்கலாம் என்று அந் நாட்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜார்ஜியா பல்கலைக்கழக நிர்வாகிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பானது நடைபெற்றது.

ஜார்ஜியா நாட்டில் உள்ள பல்கலைகழகத்தில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கான விதிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டன.

மருத்துவர் சந்தான கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜார்ஜியா பல்கலைகழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர் சந்தானம் கூறுகையில்,

இந்தியாவில் மட்டும் நீட் தேர்வு எழுதினால் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்க முடியும் என்று சட்டம் உள்ளது மற்ற நாடுகளில் இதுபோன்று இல்லை

வெளிநாடுகளில் படிக்கும் மருத்துவர்கள் அந்நாட்டில் மருத்துவம் பார்பதற்க்கு சான்றிதழ் வைத்து இருந்தால் மட்டுமே இந்தியாவில் பணியாற்ற முடியும் என என்,ஓ,சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஜார்ஜியா சென்று தயக்கமில்லாமல் மருத்துவம் படிக்கலாம் நான் இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை ஜார்ஜியாவில் மருத்துவம் படிப்பதற்கு அனுப்பி உள்ளேன்.

ஆனால் இந்தியாவில் போடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் அதிகப்படியான மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு இருப்பதால் தான் சிறந்த மருத்துவர்கள் உருவாகின்றனர்.

ஆனால் இந்தியாவில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் வெளிநாடு சென்று படிக்கின்றனர் ஆனால் மத்திய அரசு போட்ட உள்ள கட்டளைகளால் அவர்கள் வெளிநாடு சென்று படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story