/* */

செங்கல்பட்டில் கன மழை: சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டில் பெய்த கன மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் கன மழை:  சாலையில் ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
X

செங்கல்பட்டில் பெய்த கனமழையால் சாலையில் ஓடும் நீர்.

வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, இன்று மாலை முதல் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை கொட்டித்தீர்த்தது. செங்கல்பட்டு நகர பகுதியில் இரவு வெளுத்து வாங்கிய கன மழை காரணமாக அரசு தலைமை மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் உள்பட ஜி.எஸ்.டி சாலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீரானது பெருக்கெடுத்து ஓடியது.

இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மேலும் மழையின் போது சாலைகாளில் தேங்கும் வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?