/* */

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் தாெந்தரவு: ஒருவருக்கு 5 ஆண்டு சிறை
X

பாண்டியன்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டல் புரிந்த நபருக்கு 5 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஜெயங்கொண்டம் அருகே 13 வயது சிறுமியிடம் பாண்டியன் (47) த/பெ கலியமூர்த்தி என்பவர் வலுக்கட்டாயமாக பாலியல் சீண்டல் செய்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து சென்ற சிறுமியிடம் இதை யாரிடமாவது கூறினால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் பாண்டியன் என்பவர் சிறுமியை பாலியல் சீண்டல் செய்து, வலுக்கட்டாயமாக மானபங்கம் செய்ய முற்பட்டார், என்பதனை அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தகுந்த ஆதாரங்களுடன் சமர்ப்பித்தார்.

இதனடிப்படையில் இன்று அரியலூர் சிறப்பு மகிளா விரைவு நீதிமன்றம் குற்றவாளியான பாண்டியனுக்கு சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறை காலம் மற்றும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தண்டனை வழங்கியது. அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Updated On: 15 Jun 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!