/* */

அரியலூர்: குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் தினபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நீதிபதி, கலெக்டர் பரிசுகளை வழங்கினர்.

HIGHLIGHTS

அரியலூர்: குழந்தைகள் தின விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

அரியலூரில் நடந்த குழந்தைகள் தினவிழா போட்டிகளில்  வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர், நீதிபதி பரிசுகளை வழங்கினர்.

அரியலூர் மாவட்டம், நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் மாவட்ட சட்டப்பணி ஆணைகள் குழு சார்பில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். மேலும், மழைநீரின் சேகரிப்பு குறித்து மாணவ, மாணவிகளின் வில்லுபாட்டு கலைநிகழ்ச்சி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான மாணவிகளின் சொற்பொழிவு நடைபெற்றது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர்களுக்கு குழந்தைகள் ராக்கிகயிறு கட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி மகாலெட்சுமி பேசும்போது

வளர்ந்து வரும் நாகரீக உலகில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் மூலம் நமது அன்றாட வாழ்வில் மின்னணு சாதனங்கள் இன்றியமையாததாக உள்ளது. இவற்றை நல்ல முறையில் பயன்படுத்துவது நமது கைகளில் உள்ளது. மேலும், மின்னணு சாதனங்களை முறையாக பயன்படுத்திட மாணவச் செல்வங்களுக்கு பெற்றோர்களும், ஆசிரியர் பெருமக்களும் நல்வழி காண்பிக்க வேண்டும். பள்ளி பருவத்தில் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் தனக்கான ஒரு பாதையை வகுத்துக்கொண்டு அதில் சிறந்த மாணவ, மாணவிகளாக உருவாகும் வகையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி பேசும்போது

மாணவ, மாணவிகள் அனைவரும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பருவம் உங்களுக்கு வளரிளம் பருவமாக உள்ளதால் மற்றவர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நமது அறிவை வளர்ப்பதற்காக கல்வி கற்க வேண்டுமே தவிர மதிப்பெண்களுக்காக அல்ல. எந்த பணி செய்தாலும் அதனை புதுமையுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்ய வேண்டும்.

தம்மை தாமே நாம் சுய பரிசோதனை செய்துக்கொண்டு, தங்களுடைய தனித்திறமைகளை அடையாளம் கண்டு, வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நமது மனசு சொல்வதன் அடிப்படையில் முடிவு எடுக்காமல் நம் அறிவு சொல்லும்படி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள் தாக்கத்திற்காலாகாமல் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். நமது தனித்திறமையை அடையாளம் கண்டு நமக்கான ஒரு பாதையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் நமக்கான வாய்ப்புகள் சிறப்பாக தேடி வரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ச.துரைமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.ராமன், மாவட்ட சமூக நல அலுவலர் கு.சாந்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நா.சாவித்ரி, குழந்தைகள் நலக்குழுத் தலைவர் வ.துரைராஜன், நன்னடத்தை அலுவலர் த.புஸ்பராஜா, பள்ளி தலைமையாசிரியர் சகோ.இசபெல்லாமேரி, குழந்தைகள் உதவி மையம் 1098 ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன், மற்றும் பள்ளி மா ணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Nov 2021 10:36 AM GMT

Related News