/* */

அரியலூர்- மணல் கடத்தல் லாரியை போலீசார் 7 கி.மீ. தூரம் விரட்டி பிடித்தனர்

அரியலூர் மாவட்டத்தில் மணல் கடத்தல் லாரியை போலீசார் 7.கி.மீ. தூரத்திற் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்- மணல் கடத்தல் லாரியை போலீசார் 7 கி.மீ. தூரம் விரட்டி பிடித்தனர்
X

பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரி.


அரியலூர் மாவட்டம் கீழப்பழூவூர் அருகேயுள்ள ஆலந்துறையார் கட்டளை கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கீழப்பழூவூர் இன்ஸ்பெக்டர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் அவர்களை மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.

ஆனால் மணல் கடத்தி வந்த லாரி மாற்று பாதையில் சென்றுள்ளது. மேலும் லாரியின் முன்பு அதிவேகத்தில் காரும் சென்றுள்ளது. அதனை ஏழு கி.மீ,.தூரம் விரட்டி சென்று மேலப்பழூர் கிராமத்தில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது போலீசார் லாவகமாக மடக்கி பிடித்தனர்.

அப்போது லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் முன்னால் சென்ற காரில் மாற்று திறனாளியை அமர வைத்து கொண்டு நடுவழியில் போலீசார் மறித்தால் உடல்நிலை சரியில்லாதவரை அழைத்து செல்கிறோம் என கூறி, பின்னால் வந்த லாரியை மடக்கி பிடிக்காத அளவுக்கு போலீசாரை திசை திருப்பி விடலாம் என திட்டம் போட்டது தெரியவந்தது.

இதனையடுத்து லாரி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் ரமேஷ், ராஜேஷ், மருதமுத்து, ராமதாஸ், கார்த்திகேயன், ராஜ்குமார் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் திருடர்களை விரட்டி பிடித்த கீழப்பழூவூர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Updated On: 17 Sep 2021 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு