/* */

அரியலூர் மாவட்டத்தில் நாளை 18 இடங்களில் தடுப்பூசி முகாம்

அரியலூர் மாவட்டத்தில் நாளை 18 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நாளை 18 இடங்களில் தடுப்பூசி முகாம்
X

பைல் படம்

அரியலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மனக்கால் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோவிந்தபுரம் கிராமத்தில் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கடுகூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அஸ்தினாபுரம் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொய்யாதநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலுப்பையூர் கிராம சேவை மையத்தில் மதியம் 2.30 மணி முதல் மதியம் 4.30 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குருவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் குருவாடி கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஏலாக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சுள்ளங்குடி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், விழுப்பணங்குறிச்சி கிராம சேவை மையத்தில் மதியம் 2.30மணி முதல் 4.30மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

செந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதியில் இரும்புலிக்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறுகடம்பூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், உஞ்சினி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் 2.30 மணி வரையிலும், சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. குமுழியம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வீராக்கள் கிராம சேவை மையத்தில் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் தடுப்பூசி மையம் நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உட்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தழுதாழைமேடு கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், பெரியவளையம் கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், உட்கோட்டை கிராம சேவை மையத்தில் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும், சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழுதுடையான் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், விளந்தை கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், ஓலையூர் கிராம சேவை மையத்தில் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடுவளூர் கிராம சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மனகெதி கிராம சேவை மையத்தில் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், காடுவெட்டான்குறிச்சி கிராம சேவை மையத்தில் மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

Updated On: 30 May 2021 1:48 PM GMT

Related News