/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

அரியலூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க, 17ம்தேதி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் NHFDC திட்டத்தின் மூலம் கடன் வழங்கி, அவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்திட ஏதுவாக அரியலூர் கூட்டுறவுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து அனைத்து கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் 17.05.2022 (செவ்வாய் கிழமை) அன்று மாற்றுத் திறனாளிகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்று தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, இரண்டு புகைப்படம் (Passport Size) சமர்ப்பித்து ரூ.100/-பங்குதொகை மற்றும் ரூ.10/-நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்ந்து NHFDC திட்டத்தின் மூலம் கடன் பெற்று பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 14 May 2022 7:00 AM GMT

Related News