மேஷம் முதல் கன்னி வரை ராசிகளுக்கான பொதுவான பலன்கள்: படிச்சு பாருங்க...பகுதி-1

மேஷம் முதல் கன்னி வரை ராசிகளுக்கான  பொதுவான பலன்கள்: படிச்சு பாருங்க...பகுதி-1
X

12 ராசிகளின் பெயர்கள் தமிழ், மற்றும் ஆங்கிலத்தில்  (கோப்பு படம்)

Kanni Rasi Natchathiram-ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டிதான். நாம் எச்சரிக்கையுடன்இருக்க. முழுமையான நம்பிக்கையில் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஒரு சிலர் உழைப்பை மட்டுமே நம்பக்கூடியவர்களாக இருப்பார்கள்.

Kanni Rasi Natchathiram-வாழ்க்கையில் மனிதர்களாகப்பிறந்த ஒவ்வொருவருக்கும் ஜாதகம், ராசி, நட்சத்திரம் என்பது உண்டு. அதாவது அவர்கள் பிறந்த நாள், நேரம், வைத்து இவையெல்லாம் கணக்கிடப்படுகிறது. ஆனால் பலர் ஜோதிடத்தினை நம்புவதே இல்லை. ஆனால் ஒரு சிலரோ காலை எழுந்தவுடன் காலண்டரில் இன்று நம் ராசிக்கு என்ன போட்டுள்ளது, அதேபோல் நாளிதழ், டிஜிட்டல் நியூஸ் உள்ளிட்ட தளங்களில் நம் ராசிக்கு என்ன பலன் போட்டிருக்கிறார்கள் என்று பார்த்து நிம்மதி அடைவோரும் உண்டு.

அந்த வகையில் ராசிபலன்களில் இன்று வெற்றி என்று போட்டிருந்தால் சும்மா உட்கார்ந்தால் வெற்றி கிடைத்துவிடாது. அதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும். ஜோதிடம் என்பது ஒரு வழிகாட்டிதான். ஒருசில நேரத்தில் அவரவர்களுடைய ஜாதகப்படி ஒரு சில நல்ல விஷயங்கள் நடக்கும். அதுவே அவருக்கு நேரம் சரியில்லை என்றால் இதற்கு நேர்மாறாகவே நடக்கும். எனவே ஜோதிடம் பார்த்து நீங்கள் பணக்காரனாகப் போகிறீர்கள் என்று சொன்னால் உழைக்காமல் ஒன்றுமே ஆகிவிட முடியாது. உங்களின் பங்களிப்பு ஏதேனும் இருக்க வேண்டும். சரி மேட்டருக்கு வருவோமா? மொத்தம் உள்ள 12 ராசிகளில் மேஷம் முதல் கன்னி வரை உள்ள 6 ராசிகளுக்கான பொதுப்பலன்கள் பற்றி பார்ப்போம்...வாங்க...


மேஷராசி:

அசுவனி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் இந்த நட்சத்திரங்களில் அதாவது மேஷராசியில் பிறந்தவர்கள் பூமி, காணி நில புலன்கள், வீடு, விவசாயத் தொழிலில் மேன்மை, ஆள், அதிகாரங்களுடனும் இருப்பார்கள். அரசாங்கத்தாரால் கவுரவிக்கப்படுவார்கள். அற்ப ஆசைகள் இல்லாதவர்களாகவும், வாக்கு வன்மையும், கோப குணம், முரட்டு சுபாவங்களுடனும், கம்பீரமான தோற்றங்களுடனும், தெய்வீக வழிபாடுகள், சாஸ்திர ஆசார அனுஷ்டானங்கள் நிரம்பப் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பொன் ஆபரணங்களையும், பட்டுப்பீதாம்பரங்களையும், வஸ்திரங்களையும், பெற்றிருப்பார்கள்.

கல்வியில் திறன் பெற்றிருப்பார்கள்.மெலிவான, இளைத்த சரீரத்துடன் நீண்ட கழுத்து, கை கால்களுடன் இருப்பார்கள். நீண்ட ஆயுளுடன், திரேக பலத்துடனிருப்பார்கள். மேஷ ராசி என்பது மேடான ராசி என்றும்,இந்த ராசியில் பிறந்தவர்கள் மேன்மையான அந்தஸ்துடன், கீர்த்தி , செல்வாக்கு, சுகம் இவைகளைப் பெற்றிருப்பார்கள் என்று பொதுவாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.


ரிஷப ராசி

கிருத்திகை 2,3,4 பாதங்கள், ரோஹிணி, மிருக சீரிஷம், 1,2 பாதங்கள் இவைகளாகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், அதாவது ரிஷபராசிக்காரர்கள்,பருத்தஉடலும் ,கம்பீரமான தோற்றமும், மெதுவான செய்கைகளையும், மந்தமான குணங்களுடன் , கல்வி , கணிதம், சாஸ்திரங்களை ஓரளவு கற்றும் தேவாலய, தெய்வீக வழிபாடுகளுடன் , பக்தி சிரத்தையுடன் இருப்பார்கள். ஆடை ஆபரணம், நகைகள், செல்வம் முதலியவைகளைப் பெற்றிருப்பார்கள்.

வேடிக்கையாகப் பேசும் குணங்களுடன், புத்திரர்களிடத்திலும், மற்றும் குழந்தைகளிடத்திலும், பிரியமாகப் பேசியும், பழகும் குணமும் இருக்கும். புளிப்பு, காரம், வஸ்துவில் பிரியம் அதிகம் . தாங்கள் தாராள குணத்துடன் செலவு முதலியவைகளைச் செய்யாமல்,பிறரை செய்யும்படிச் சொல்லி, அதனால் பலன்களைத் தாங்கள் பெறுவார்கள்.வண்டி வாகனங்களுடன் , செல்வத்துடனும், செல்வாக்குடனும் இவர்கள் 80 வயதுக்கு மேலும் சரீர சுகங்களுடன் இருப்பார்கள்.

mesham to kanni rasi, general characters


மிதுன ராசி

மிருக சீரிஷம் 3,4 பாதங்கள் , திருவாதிரை,புனர்பூசம், 1,2,3, பாதங்களில் பிறந்தவர்கள் மிதுனராசிக்காரர்கள் ஆவார்கள். அதிகமான எண்ணங்களையும், நோக்கங்களையும், பெற்று கல்வியில் தேர்ச்சியும், கணிதத்தில் வன்மையும், பேச்சில் சாமர்த்தியத்தையும், சதா சிரித்துப்பேசும் குணமும், கபடமும், தந்திரங்களும் சுயநலக் காரியவாதிகளாகவும் இருப்பார்கள். தெய்வீக வழிபாடுகளும் ஆசார அனுஷ்டானங்களில் நம்பிக்கையும் கீர்த்தியையும் பெற்றிருப்பார்கள்.

நீண்ட திரேகமும், உடலமைப்பையும், கருமை நிறமாகவும், பித்தசம்பந்தமான வியாதிகளுடனும், தைரியஸ்தர்களாகவும், இருப்பார்கள். தான் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கறாரும் கண்ணியமும் நிறைந்திருக்கும். எழுதுவதில், கலைத்துறையில் ஆர்வமும், திறமையும் பெற்றிருப்பார்கள். செல்வத்துடனும், செல்வாக்குடனும் தங்களுடைய திறமையினால் முன்னேற்றத்தினை அடைவார்கள். ஆயுள் 70 வரையில் தீ்ர்க்க மெனக்கூறலாம்.


கடகராசி

புனர்பூசம் 4ம் பாதம், பூசம்,ஆயில்யம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் கடகராசிக்காரர்கள். சிவந்த மேனியுடன் திரேக அங்கலக்ஷண அவயவங்களுடன் இருப்பார்கள். கல்வியில் திறமையையும், தெய்வீக வழிபாடுகளையும்,ஆசார அனுஷ்டானங்களையும் அறிந்திருப்பார்கள். பேச்சில் சாமர்த்தியமும், பணவிஷயங்களில் சுயநலப் புலிகளாகவும், பிறரை ஏமாற்றும் குணம் கொண்டவர்களாகவும், கெட்டிக்கார குணத்துடனும்,தன்னைத்தானே புகழ்ந்து பேசிக்கொண்டும் குழந்தைகளிடம் மேலுக்கு அன்பைக் காட்டியும், பந்துமித்ரர்கள் நண்பர்களிடத்தில் பிரியமில்லாமல் ,பிரியம் கொண்டவர்கள் போல பழகும் சுபாவமும், சதா ஸ்த்ரீகளுடன் உறவாடியும் பழகி வருதலும், சமூகத்தில் துன்மார்க்கன், மோசக்காரன், என்ற பெயருடனும் விளங்குவார்கள்.

தகப்பனார், தாயாரிடம் மரியாதை கொள்ளாமலும், பெரியவர்களிடம் பணிவு இல்லாமலும், தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணங்களுடன் கர்வத்துடன் இருப்பார்கள். ஸ்திர சொத்துகளையும், செல்வத்தையும் கபட மார்க்கத்திலேயே விருத்தி செய்து கொள்வார்கள். சரும நோயும், பித்த சம்பந்தமான வியாதிகளும், கொடிய நோய்களும் உண்டாகலாம்.கிரஹ பலங்களுடன் பிறக்கும் கடகராசிக்காரர்கள் தீர்க்க ஆயுளுடன் 90 வயது இருப்பார்கள்.


சிம்மராசி

மகம்,பூரம் உத்திரம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள், சூரியனைப் போன்று விளங்குவார்கள். தைரியமும்,வாக்குவன்மையும், தெய்வீக தேவாலய வழிபாடுகளுடன் ஆசார அனுஷ்டானங்களிலும் சிறந்த விளங்குவர். கல்வியில் ஊக்கமும், சாஸ்திர ஆராய்ச்சிகளில் தேர்ச்சியும் அடைவர்.வேதங்களில் பற்றுதல் இருக்கும் . பெரிய மனிதர்களின் நட்பும்,சகவாசமும், அந்தஸ்தும் ஏற்படும். சமூகத்தில் கீர்த்தியுடனும், பிரபலத்துடனும் விளங்குவார்கள். உன்னதப் பதவியில் செல்வம், செல்வாக்கு, ஸ்திர சொத்ததுக்களுடன் இருப்பார்கள். குடும்பம் சிறப்புடன் இருக்கும். புத்திர பாக்யங்களுடன் வாழ்வார்கள்.

சிம்மராசியில் பிறந்தவர்கள் சிவபெருமான் அருளைப் பெற்று இருப்பார்கள். அதிகமாக உணவு புசிப்பார்கள். வியாதிகள் ஏற்பட்டாலும் உடனே குணமாகும். தொழிலில் ஊக்கத்துடன் விளங்குவார்கள். தன்னுடைய அந்தஸ்துக்குக் குறைவாக இருப்பவர்களிடம் அலட்சியத்துடனும், அதிகாரங்களுடனும், சிறிது கர்வம் கொண்டவர் போல நடந்துகொள்வார்கள். கோபமும், படபடப்பும் தலையெடுத்திருக்கும்.சிம்மராசியில் பிறந்தவர்கள் கிரஹ பலத்துடன் ஜாதகம் அமைந்திருந்தால் 80 வயதுகளுக்குக் குறைவில்லாமல் நல்ல சுக சவுகர்யங்களுடன் இருப்பார்கள்.

mesham to kanni rasi, general characters


கன்னி ராசி

உத்திர நட்சத்திரம் 2,3,4 பாதங்கள் ,ஹஸ்தம் , சித்திரை 1,2 பாதங்களில் பிறந்த கன்யா ராசிக்காரர்கள் பிரசித்திகொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் , தரித்திரத்தையும், வறுமையையும், அனுபவிக்க நேரிடும். தெய்வீக வழிபாடுகளில் சிறந்தவர்களாகவும், ஆசார சீலர்களாகவும், நீதி, நேர்மை, பண்புகளுடன் கூடியவர்களாகவும் இருப்பார்கள். எக்காரியங்களிலும் எவ்வித தொழிலிலும் அவர்கள் ஞானத்தைப் பெற்றிருப்பார்கள். சமூக சேவைகள் செய்ய பிரியம் கொண்டவர்களாகவும், தங்களது பிற்காலத்தில் செல்வத்துடனும், செல்வாக்குடனும், சிறப்புடன் விளங்குவார்கள். தான தருமங்கள் செய்வதிலும், தன் நிலையையும் மறந்து பிறருக்கு உபகாரங்கள் செய்வதையும் லட்சியமாக கொண்டிருப்பார்கள்.

கன்யா ராசியில் பிறந்தவர்களை முக்கியமாகத் தாயாதிகளும், உற்றார் உறவினர் ,நண்பர்களும் ஏமாற்றி செல்வத்தையும் பொருளையும் அபகரிப்பார்கள். ஆயினும் கன்யாராசிக்காரர்கள் பொறாமைக்குணங்களுடன், தங்களது மெதுவான சுபாவத்துடனும், அன்பு கலந்த பேச்சுகளினாலும், எதிர்காலத்தில் சிறப்பைப் பெறுவார்கள். சுபக்கிரஹங்கள், பார்வையுடனும் பலத்துடனும், பிறந்த கன்யாராசிக்காரர்கள் சுக சவுகர்யங்களுடன் 70ஆண்டுக்காலம் ஜீவித்திருப்பார்கள்.

(இன்னும் வளரும்...)

நன்றி:ஜோதிஷ வித்வான்கள்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story