கீதாசாரத்தில் மேலாண்மை: உ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்ட வகுப்பு துவக்கம்

கீதாசாரத்தில் மேலாண்மை: உ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்ட வகுப்பு துவக்கம்
கீதாசாரத்தில் மேலாண்மை சம்பந்தமாக விஷயங்கள் இருப்பதால் உ.பி. பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. உயர் படிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள். இதில் கூறப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறைகள், பண்பாடுகள், வாழ்வியல் முறைகள் தான் இந்திய மக்களை வேற்றுமையலும் ஒற்றுமையாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இருந்து வெளியேறிய இந்த நெறிமுறைகள் இன்று உலகின் பல நாடுகளிலும் போற்றப்பட்டு வருகிறது.

இதிகாசங்களில் அறநெறிகளும், தர்ம வழிமுறைகளும் அதிகமாக கூறப்பட்டுள்ளது மட்டுமின்றி இன்றைய விஞ்ஞான உலகிற்கு தேவையான மேலாண்மை தொடர்பான விஷயங்களும் இடம்பெற்று இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 18 நாட்கள் நடந்தது பாரதப் போர். குருசேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பாரதப் போரின் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு அளித்த உபதேசங்கள் கிருஷ்ண உபதேசம் அல்லது கீதாசாரம் என அழைக்கப்படுகிறது.

இந்த கீதாசாரத்தில் இல்லாத வாழ்க்கை தத்துவங்களை இல்லை என்பது மட்டுமல்ல கல்வி தொடர்பான, மேலாண்மை தொடர்பான விஷயங்களும் ஏராளமாக உள்ளன. இதை வெளிக்கொண்டுவரும் வகையில் நவீன யுகத்துக்கு ஏற்றபடி அதில் உள்ள கருத்துக்களை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு செல்வதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் எம். பி. ஏ. பட்டப்படிப்பினை தொடங்கியுள்ளது.

கீதாவுபதேசத்தில் உள்ள மேலாண்மை தொடர்பான விஷயங்கள், கருத்துக்கள் இந்த பாடப்பிரிவில் இடம் பெற்று இருக்கும் .இது ஒருங்கிணைந்த ஐந்தாண்டு உயர் பட்டப்படிப்பு ஆகும். இது மட்டும் இன்றி ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச நூல்களில் உள்ள கல்வி மற்றும் மேலாண்மை தொடர்பான கருத்துக்களும் இந்த ஒருங்கிணைந்த பட்ட படிப்பில் கற்றுக் கொடுக்கப்படும் என உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த புதிய பட்டப்படிப்பில் நாடு முழுவதும் இருந்து தற்போது 26 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழகத்தில் சனாதானம், இந்துத்துவா போன்ற கொள்கைகளுக்கு கடுமையான எதிர்ப்பு அலைகள் உருவாகியுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இதிகாசங்களின் பின்னணியில் பல்கலைக்கழகமே ஒரு பட்டப் படிப்பினை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story