'மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்' - கடவுள் காட்டிய வழியில் நடந்தால்...

God Quotes in Tamil
X

God Quotes in Tamil

God Quotes in Tamil-வாழ்ந்த மனிதர்கள் சிலர், இன்று தெய்வமாக போற்றப்படுகின்றனர். ஆனால், வாழும் காலத்திலேயே ஒரு மனிதன், தெய்வ நிலையில் வாழ்ந்தால் அது அற்புதமானது. அதிசயமானது.

God Quotes in Tamil-உங்களது நிழலாய் இறைவன் உங்களை பின் தொடர்கிறார். கடவுளின் வழித்துணை உங்கள் பயணம் முழுவதும் நீடிக்கிறது. வாழ்க்கையை பற்றிய பயம், கவலை இல்லாமல், உங்கள் பயணத்தை தொடர்ந்துகொண்டே இருங்கள். இறைவனின் அன்பும், ஆசியும், அருளும் என்றென்றும் நம்முடன் இருக்கும் வரை, அச்சம் என்பதே இல்லை.

'கடவுள்' என்ற வார்த்தை சிலருக்கு பக்தியை தருகிறது, சிலருக்கு தேடுதலைத் தருகிறது. கடவுள் பற்றிய பேச்சுகள் அன்றாடம் ஆங்காங்கே தொடர்ந்து நடக்கிறது. கடவுள் தன்மையை நம் அனுபவமாக்கிட சில வாசகங்கள் இங்கே வழிகாட்டுகின்றன.

அனைத்து எல்லைகளையும் கடந்த ஒன்றைக் குறிப்பதற்கான பெயர்தான் "கடவுள்"

பக்தி என்பது கடவுள் பற்றி அல்ல. உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் அழகாக ஆகுமளவிற்கு உங்கள் உணர்வுகளை இனிப்பாக மாற்றுவதுதான் பக்தி.

கடவுள் யாரிடமும் எதையும் கேட்பதில்லை. அதனால்தான் அனைவராலும் கடவுளை நேசிக்க முடிகிறது. ஆனால் உங்களுக்குப் பக்கத்தில் இருப்பவரை நேசிப்பதற்கு உயிரையே கொடுக்க வேண்டியதிருக்கிறது

கடவுள் மிகச் சிறந்த படைப்பாளி. படைக்கப்பட்டவைகளை பாங்குடன் பராமரிப்பது உங்கள் கடன்.

கடவுள் என்பவர் படைப்பவராகத்தான் இருக்கிறார், ஒரு மேலாளராக இல்லை. மனிதர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையை தாங்களே நடத்திக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புகிறார்.

நீங்கள் கடவுளை தேடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. நீங்கள் கடவுளைப்போல் ஆவதே என் விருப்பம்.

கடவுள் என்பவர் பரலோகத்தில் அமர்ந்திருக்க, நீங்கள் அங்கே செல்ல அக்கறை கொள்ளாவிடில் அது சரியே. ஆனால் அவர் உங்களுக்குள்ளிருந்து இயங்கிக்கொண்டிருப்பது உங்கள் கவனத்தில் இல்லையென்றால் ஆபத்தான மூடத்தனம்.

நீங்கள் ஆத்திகவாதியாக இருந்து, வாழ்க்கை நீங்கள் நினைத்தது போல் நடக்காமல், கடவுளின் விருப்பத்துக்கு நடந்தால், அதில் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

மனிதனாக இருப்பதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்தால், நீங்கள் கடவுளைப் பற்றியோ அல்லது சொர்க்கத்தைப் பற்றியோ பேச மாட்டீர்கள்.

உங்கள் சக்திகளை உச்சநிலைக்கு உயர்த்தினால் கடவுள் என்பவர் உங்கள் அனுபவத்தில் உண்மையாகிவிடுவார்.

இந்தியக் கலாச்சாரத்தில், தெய்வங்கள் பாடவும் செய்வார்கள் ஆடவும் செய்வார்கள். இசையோ அசைவோ இல்லாத கடவுள் மந்தமாக இருப்பதோடு, படைப்பின் பிற அம்சங்களோடு ஒத்திருக்கவும் முடியாது.

கடவுள் இருப்பதால் பக்தி ஏற்படவில்லை, பக்தி இருப்பதால் தான் கடவுள் இருக்கிறார்.

நீங்கள் கடவுள் என்றழைப்பதும் படைத்தவன் என்றழைப்பதும் ஏன் படைப்பின் மூலம் என்றழைப்பதும் எப்போதும் விழிப்பில் உள்ளது. அது தன்னை பின்வாங்கிக் கொண்டால், இந்த முழு பிரபஞ்சமும் தகர்ந்து மறைந்துவிடும்.

உங்கள் வாழ்க்கை உங்கள் உருவாக்கம். கடவுள் அதில் தலையிடுவதில்லை.

என் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் பக்தியில் தோய்ந்துள்ளது. எங்கோ, மேலே இருக்கும் கடவுளின் மீதல்ல, எனைச் சுற்றி இருக்கும் அனைத்தின் மீதும்.

பிரார்த்தனை என்பது கடவுள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் சொல்ல முயல்வது. தியானம் என்பது உங்கள் எல்லைகளை உணர்ந்து நீங்களே வாய்மூடி இருப்பது.

'கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்' என்றாலும், 'எல்லாம் ஒரே சக்திதான்' என்றாலும் ஒரே உண்மைதான், வெவ்வேறு விதங்களில் சொல்லப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Next Story