ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரணை

ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரணை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் விசாரணை நடத்தினார்.

தமிழக ஆளுநர் மாளிகைக்கு வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.

தமிழக ஆளுநராக இருப்பவர் ஆர். என். ரவி ஆளுநர் ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது. தமிழக அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி கொடுக்காமல் கிடப்பில் போடுவது, தி.மு.க. அரசு மீது குற்றம் சுமத்தி பொது மேடைகளில் பேசுவது சனாதனம் மற்றும் இந்துத்துவா பற்றி பேசுவது ஆளுநர் மீது தி.மு.க. சார்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளாக உள்ளது .ஆளுநர் 10 மசோதாக்களை நிறைவேற்ற வில்லை எனக் கூறி சட்டசபையில் இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது .அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக போலீஸ் மீது நம்பிக்கை இல்லாமல் மத்திய அரசின் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் ஆளுநர் மாளிகை மீது வீசப்பட்ட குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டு சென்றார்கள்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று தமிழக ஆளுநர் மாளிகைக்கு வந்தார். ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி விட்டு சென்றிருக்கிறார். இது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story