நாய்க்கறி விவகாரம்: ஆர்.எஸ். பாரதிக்கு நாகா கவர்னர் இல. கணேசன் கண்டனம்

நாய்க்கறி விவகாரம்: ஆர்.எஸ். பாரதிக்கு நாகா கவர்னர் இல. கணேசன் கண்டனம்

நாகாலாந்து மாநில கவர்னர் இல. கணேசன்.

நாய்க்கறி விவகாரம் தொடர்பாக தி மு க வின்ஆர்.எஸ். பாரதிக்கு நாகா கவர்னர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

நாய்க்கறி விவகாரம் தொடர்பாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதிக்கு நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. விற்கும் கவர்னர்களுக்கும் தற்போது ஏழாம் பொருத்தம் காலமாக இருக்கிறது. தமிழக ஆளுநர் ரவி பற்றி தி.மு.க.வின் வட்ட செயலாளர் முதல் முதலமைச்சர் வரை தினம் தோறும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதே போல ஆளுநரும் அவர் பங்கிற்கு திராவிட கட்சிகளின் ஊழல்கள் குறித்தும் சனாதனம் பற்றியும் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார்.

ஆளுநர்- தி.மு.க. விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இப்போது தமிழகத்தை தாண்டி வட மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. இதற்கு காரணம் தி.மு.க. அமைப்புச் செயலாளராக இருந்து வரும் ஆர். எஸ். பாரதி தெரிவித்த ஒரு கருத்து தான்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி நாங்கள் என்ன நாகாலாந்து காரர்களைப் போல் நாய்க்கறி சாப்பிடுபவர்களா? நாங்கள் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள். எங்களுக்கு ரோஷம் அதிகம் என்கிற வகையில் பேசி உள்ளார். இந்த பேச்சு வட இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது .

ஆர். எஸ். பாரதியின் இந்த பேச்சுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நமது அண்டை மாநிலமான தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஆர். எஸ். பாரதி நாகாலாந்து மக்களின் உணவு பழக்கம் பற்றி நான் அப்படி கூறவில்லை அது திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று மழுப்பி உள்ளார்.

ஆனாலும் ஆர்.எஸ் .பாரதி மீதான கண்டனக்னைகள் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவரும் நாகலாந்து மாநிலத்தின் தற்போதைய கவர்னருமான இல. கணேசன் ஆர் எஸ் பாரதிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

நாகாலாந்து மாநில மக்கள் அன்பானவர்கள் அவர்களது உணவு பழக்கம் பற்றி ஆர் எஸ் பாரதி கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு மாநில மக்களின் உணவு பழக்கமும் அவர்களது தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. ஆர். எஸ். பாரதி கூறி இருப்பது நாட்டின் கலாச்சாரத்தை சிதைப்பது போல் உள்ளது. ஒரு மாநில உணவு பழக்கத்தை வைத்து அவர்களை கொச்சைப்படுத்தக்கூடாது. ஒட்டு மொத்த நாகா மக்களையும் நாய்க்கறி சாப்பிடுபவர்கள் என கூறக்கூடாது. தமிழர்களுக்கும் நாகா மக்களுக்கும் இடையில் உள்ள உறவை கெடுக்கும் வகையில் ஆர்.எஸ். பாரதியின் பேச்சு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story