Congress Never lose Vote வெற்றி வாய்ப்பை மட்டுமே இழந்துள்ளோம் ஓட்டு வங்கியை இழக்கவில்லை :காங்.தலைவர் அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி. (கோப்பு படம்)
Congress Never lose Vote
இந்தியாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது தனது ஓட்டு வங்கியை இழக்கவில்லை.தேர்தலில் தோல்வி மட்டுமே அடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அண்மையில் நடந்து முடிந்த சட்டசபைத்தேர்தலி்ன் முடிவானது எதிர்பார்த்ததை விட ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்திருப்பது பெருத்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. 4 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியானது 4.91 கோடி ஓட்டுகளைப் பெற்றுள்ளது. பாரதிய ஜனதா 4.80 கோடி ஓட்டுகளைப் பெற்றுள்ளது. மேற்கண்ட புள்ளி விவரப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியானது தனதுஓட்டு வங்கியை இழக்கவில்லை ஆனால் வெற்றி வாய்ப்பை மட்டுமே இழந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
2003 ம் ஆண்டு மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கு நடந்த சட்டசபைத்தேர்தலில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அடுத்த சில மாதங்களில் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அதே மாநிலங்களில் அதிக இடங்களில்வெற்றி பெற்றுமத்தியில் ஆட்சி அமைத்தது. எனவே 2024 ம் ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பாஜவை நிச்சயம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியானது தோற்கடிக்க முடியும்.
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதில் பெருகவில்லை. நாட்டின் அடிப்படையான விவசாயத்திற்கு எதுவுமே செய்யவில்லை. விலைவாசியைக் குறைக்கமுடியவில்லை. கடுமையாக உழைத்தால் ஆட்சியைப்பிடிக்க முடியும் என்பதற்கு தெலுங்கானா வெற்றி ஒரு உதாரணம் ஆகும்.
பிரசாரத்தில் ராகுல் முன்வைத்த கருத்தியலை,. மாநில காங்கிரஸ் அமைப்புகள் மக்களிடம் சென்று சேர்த்ததா என்பது மிகுந்த ஆய்வுக்குரியது. அந்த கருத்துகளை முன்வைத்திருந்தால் பாஜவின் வகுப்பு வாத அரசியலைப் பற்றி மக்கள் அறிந்துஇருப்பார்கள். ஒரு சில மாநிலங்களில் பாஜவிற்கு மாற்றாக காங்கிரஸ் இல்லாததது வருத்தத்திற்கு உரியது. இதனால்தான் பாஜ கூடுதலான இடங்களைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. காங்கிரஸ் பாஜ இருகட்சிகளுக்கும் இடையேயான கொள்கைப்போராட்டம் என்பது நீண்டகாலமாக நடந்து வருகிறதுதான்.
இந்த போராட்டத்தினை ராகுல்காந்தி தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அவர் வகுக்கும் கொள்கைகளை பாதைகளை காங்கிரஸ் கட்சியினர் உறுதியுடன் மேற்கொள்வதனால் லோக்சபா தேர்தலில் பாஜவைத் தோற்கடித்து மோடி ஆட்சியினை அகற்ற முடியும் என கருத்து தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu